6 Feb 2023

தேடலின் மிச்சம்

தேடலின் மிச்சம்

ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறது

இதுவரை எதுவும் கண்டடைந்ததாக இல்லை

அது எப்போதும் இருக்கப் போவதில்லை

என்பது நிதர்சனம் என்பதற்காக

தேடலை நிறுத்த முடியாது

உயிர் உறங்கும் வரை தேடிக் கொண்டிருப்பதாக

தேடிக் கொண்டிருப்பதின் மர்ம சுகம்

தேடாமலிருக்க விடப் போவதில்லை

இதுவில்லை என்றால் அது

அதுவில்லை என்றால் எது என்று

தேடிக் கொண்டிருப்பதில்

ஏதோ ஒன்று இருப்பதான கானல்

எப்போதும் வழிநடத்திக் கொண்டிருக்கிறது

எப்போதாவது தேடலை நிறுத்தத் தோன்றினால்

எதைத் தேடுகிறேன்

ஏன் தேடுகிறேன்

எதற்குத் தேடுகிறேன்

எப்படித் தேடுகிறேன்

எங்கே தேடுகிறேன் என்று

தேடுவது குறித்துக் கேள்வி கேட்பதை நிறுத்து

தேடலையே கேள்வி கேள்

எரிந்த சாம்பலின் மிச்சம் அங்கிருக்கும்

எடுத்துப் பூசிக் கொண்டு கிளம்பி விடு

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...