17 Feb 2023

கிழமைகளின் பெயர்களில் மாறிக் கொள்ளும் நாட்கள்

கிழமைகளின் பெயர்களில் மாறிக் கொள்ளும் நாட்கள்

எதாவது ஒரு விடியல் புதிதாய் இருக்குமா என்று பார்க்கிறேன்

நேற்றைப் போல விடிகிறது இன்றும்

நாளையும் இன்றைப் போலத்தான் விடியும்

எழுந்ததும் பல் துலக்கிக் குளித்து

தேநீர் அருந்தி

கறிகாய் நறுக்கி

அரக்க பரக்க உணவள்ளிப் போட்டு

ஊர்கின்ற பேருந்தில் விரைந்தோடி ஏறி

வியர்வை கசகசப்பில் மலர்ந்து

அலுவலகத்திற்குள் நுழைந்து

குப்பைத்தொட்டிக்குள்

ஆயிரம் குப்பைகளில் ஒரு குப்பையாய் கசக்கி வீசி எறியப்பட்டு

தளர்ந்து போய் பேருந்துகளின் கம்பிகளில் தொங்கிப் போய்

வீடு வந்து வறண்ட தோசைகள் இரண்டை ஊற்றி

வயிற்றுக்குள் விட்டு உறங்கி எழுந்தால்

நேற்றைப் போல விடிகிறது இன்றும்

நாளையும் இன்றைப் போலத்தான் விடியும்

எப்போதும் விடியல் ஒன்றே மாறாதது

நாட்கள் கிழமைகளின் பெயர்களில் மாறிக் கொள்ளும்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...