16 Feb 2023

புதுப்பித்துப் போகும் புயல்

புதுப்பித்துப் போகும் புயல்

ஒரு புயல் வீசுகிறது

காற்று பின் சகஜமாகிறது

மக்களுக்கென்ன

புயலடிக்கையில் பாதுகாப்பாக இருந்து கொண்டு

ரசிக்கத்தான் செய்கிறார்கள்

விசிலடிப்பவர்களும் உண்டு

இவ்வளவு மரங்கள் முறிவதை

அவ்வளவு தண்ணீர் தேங்குவதை

வேறெப்போது பார்க்க முடியும் என்கிறார்கள்

இருப்பவருக்கு ஆயிரம் பத்தாயிரம் உண்டு

அதில் கவலைகளும் உண்டு

இல்லாதவருக்கு என்ன இருக்கிறது

அதில் கவலைகளும் இல்லை

இன்னொரு புயல் அடித்தால்தான் என்ன

நாம் சொல்லி கேட்கவா போகிறது

அடிப்பதும் அடிக்காமல் போவதும் அதன் விருப்பம்

ஒரு புயல்

இருக்கின்ற சொத்து சுகங்களை

அழித்து விட்டுப் போனாலும்

நிறைய நீரையும்

நிறைய வேலைகளையும்

கொஞ்சமேனும் மனித நேயத்தையும்

மனிதர்களுக்குத் தந்து விட்டுதான் போகிறது

*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...