10 Feb 2023

வீடு திரும்புதல்

வீடு திரும்புதல்

இந்த நகரை உண்டு செரிப்பது மனதுக்கும்

இந்த நகரில் உண்டு செரிப்பதும் வயிறுக்கும்

கடினமாக இருக்கிறது

நகரத்தில் உழைக்கும் உழைப்பில்தான்

கிராமத்தில் பசியாறுவதாக

அலைபேசியில் பேசும் போதெல்லாம் சொல்கிறார்கள்

அம்மச்சியும் அம்மாவும் இல்லாளும்

பசிக்காக வீட்டுக்கு ஒருவரை விரட்டி விட்டு

நகரங்களைக் கொழுக்கச் செய்கின்றன கிராமங்கள்

நகரங்கள் இல்லாவிட்டால்

சம்பாதிக்க முடியாது என்பவர்களை என்ன சொல்வது

நகரங்களுக்கு யாருமே போகா விட்டால்

யாருக்குச் சம்பாத்தியம் கொடுப்பது

சந்தைகளில் பொருட்களை விற்கலாம்

சந்தைக்குப் பொருட்கள் வரா விட்டால்

சந்தையில் எந்தப் பொருளை விற்பது

நகர்ப்புற போரினை முடித்து விட்டு

பாசறையினின்று வீடு திரும்பும் வீரனைப் போல

ஒருநாள் கிராமம் திரும்புவேன்

காத்திருக்கும் பெண்டுகளுக்காகவும் பிள்ளைகளுக்காவும்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...