11 Feb 2023

அப்பாவுக்கு எல்லாம் தெரியும்

அப்பாவுக்கு எல்லாம் தெரியும்

அப்பாவுக்குக் குடிக்கத் தெரியும்

அப்பாவுக்குப் புகை பிடிக்கத் தெரியும்

அப்பாவுக்குக் கெட்ட வார்த்தைகள் பேசத் தெரியும்

அப்பாவுக்கு போகாத இடமெல்லாம் போகத் தெரியும்

அப்பாவுக்கு வயிறு முட்ட சாப்பிடத் தெரியும்

அப்பாவுக்கு அம்மாவை அடிக்கத் தெரியும்

அப்பாவுக்கு எங்களையும் அடிக்கத் தெரியும்

அப்பாவுக்குக் காவல் நிலையத்தில்

அம்மணமாய்க் கிடந்து அடி வாங்கத் தெரியும்

அப்பாவுக்குத் தப்பு செய்து சரண்டர் ஆகத் தெரியும்

அப்பாவுக்கு எப்போதாவது

எங்கள் மீது அன்பு காட்டத் தெரியும்

அன்பு காட்டும் நேரங்களில்

உடைந்துப் போய் அழவும் தெரியும்

அப்பாவுக்கு எல்லாம் தெரியும்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...