1 Feb 2023

சம்பந்தப்படாத ரத்தங்கள்

சம்பந்தப்படாத ரத்தங்கள்

சாலையைக் கடக்க

சாலையில் கடக்க

சாலையில் அடிபட

சாலையே அடிபட

எல்லாருக்கும் ஒரு காரணம் இருக்கிறது

ஏதுமறியா நத்தைகளும்

என்னவென்றறியாத ஆமைகளும்

ஏனென்று புரியாத பாம்புகளும்

எதற்கென்று தெரியாத அணில்களும்

எப்படியென்று தெரியாத ஓணான்களும்

சாலையைக் கடக்க

சாலையில் அடிபட

இந்த ஜென்ம காரணம் இல்லையென்றாலும்

பூர்வ ஜென்ம காரணங்கள் இருக்கக் கூடும்

அடிபட்டு மாண்ட பின்னும்

வாகனங்கள் மேல் வாகனங்கள் மேலேறிச் செல்ல

பெரிதாய்க் காரணம் என்ன இருக்க முடியும்

அவரவர் அவசரம் அவரவருக்கு முக்கியம்

நிதானமாய் உட்கார்ந்து அழுவதற்கு

ரத்த சம்பந்தம் ஏதேனும் இருக்க வேண்டும்

அஃதில்லாத போது

பன்றியின் ரத்தமும்

மனிதரின் ரத்தமும் வேறு வேறு

மனிதருக்கே மனிதரின் ரத்தம் வேறு வேறு

*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...