1 Feb 2023

அமேசானில் விற்பனைக்கு வரும் குளங்கள்

அமேசானில் விற்பனைக்கு வரும் குளங்கள்

எங்கெங்கு குளம் இருந்தது

ஏரி இருந்தது என்பதை அறிவதற்கு

பெரியதோர் அறிவு உதவாது போகலாம்

பெருங்கட்டடங்கள் இருக்கும் இடமெல்லாம்

குளமிருந்த இடங்களே

பொதுப்பயன்பாட்டுக் கூடங்கள் இருக்கும் இடமெல்லாம்

ஏரி இருந்த இடங்களே

என்று சொல்லும் சின்னதோர் அறிவு மதிப்பின்றிப் போகலாம்

குளமென்ன குளம் என்று

அடுக்குமாடிக் கட்டிடத்தின் மேல்

குளமென்றைக் கட்டி எழுப்பலாம்

ஏரியென்ன பெரிய ஏரி என்று

பெரியதொரு பதாகையில் மழைநீரைச் சேமித்து வைக்கலாம்

அக்குளத்தையும் அவ்வேரியைத் தேடியும்

பறவைகளும் பாக்டீரியங்களும் வந்து சேரலாம்

காவலுக்கு நான்கு காவலர்கள் நிற்குமிடத்தில்

குளத்தில் கல்லெறிந்து மன பாரத்தைப் போக்க வரும்

ஒருவர் ஏமாற்றத்துடன் திரும்பலாம்

அவருக்கென்று ஒரு பொம்மைக் குளமோ

அலைபேசிச் செயலியோ

அமேசானிலோ பிளே ஸ்டோரிலோ விற்பனைக்கு வரலாம்

இல்லாத குளங்களுக்கும் ஏரிகளுக்கும்

வேறென்ன செய்வது

காசு பார்க்கும் பண்டம் செய்வதைத் தவிர

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...