4 Jan 2023

எல்லோரும் குளித்த நீர்

எல்லோரும் குளித்த நீர்

நாம் எல்லோரும் குளித்த நதியின் நீர்

இந்தக் கடலில்தான் கலந்திருக்கிறது

நாம் குளித்த அந்த நீரை

மீன்கள் பருகியிருக்கலாம்

மேகங்கள் கொத்தாக அள்ளியிருக்கலாம்

மீண்டும் பொழிந்து வந்த மழைநீர் பெருக்கெடுத்த

நதியின் நீரில் நாம் குளித்த நீர் இருந்திருக்கலாம்

நாம் குளித்த நீரில் மீண்டும் நாம் நீராடியிருக்கலாம்

நீராடிய நீர் கடல் சேர்ந்திருக்கலாம்

கடல் சேர்ந்த நீர்

மீண்டும் நம்மைக் குளிப்பாட்ட வந்து கொண்டிருக்கலாம்

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...