5 Jan 2023

உன் மன எரிச்சலிலிருந்து கொஞ்சம் விடுதலை கொடு

உன் மன எரிச்சலிலிருந்து கொஞ்சம் விடுதலை கொடு

நீ என்னதான் எதிர்பார்க்கிறாய்

உண்மையினின்று வீசி எறிந்து விட்ட

சாகசப் பொய்கள் நிரம்பிய வாக்குறுதிகளை

அல்லது

பார்வையிழந்து விட்ட

உன்மத்தம் நிரம்பிய உன் சொற்களின்

முன்பிலான அடிபணிவை

உன்னால் ஏற்க முடியாதவைப் போல

என்னாலும் ஏற்க முடியாத

ஒரு சில இந்த உலகில் இருக்கின்றன

ஏற்க முடியாத சிலந்திகளை

ஒழித்துக் கட்டும் ரசாயனத்தை

உன் உதடெங்கும் பூசி வைத்திருக்கிறாய்

நீ அன்பாகத்தான் முத்தமிடுகிறாய் என்றாலும்

உன் உதட்டின் ரசாயனம்

என் கன்னத்தை அரித்தெடுக்கிறது

அரிப்பைப் போக்கிக் கொள்ள

கன்னத்தைத் தடவிப் பார்க்கையில்

நான் உன்னை அவமதித்து விட்டதாக

ஊரெங்கும் புலம்பித் திரிகிறாய்

உன் மன எரிச்சல் என் உடல் எரிச்சல்

நியாயத் தராசின் முள்

இப்படியும் அப்படியுமாக அலைவுறுவதில்

என் உடல் எரிச்சலை விட

உன் மன எரிச்சல் பெரிதாக இருந்து விட்டுப் போகட்டும்

என் உடல் எரிச்சலைப் போக்கிக் கொள்ள

உன் மன எரிச்சலிலிருந்து கொஞ்சம் விடுதலை கொடு

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...