4 Jan 2023

நாம் நாறி விடக் கூடாது

நாம் நாறி விடக் கூடாது

அவர்வர் சளியை

சொற்களில் துப்பி வைக்கிறோம்

அவரவர்க்கு அமுதமாக இருக்கும் எச்சில்

மற்றவர்களுக்கு அசூயையாக

தெருவெங்கும் காறித் துப்பப்பட்டுக் கிடக்கிறது

எப்போதோ சிந்தப்பட்டு உறைந்து போன

குருதியின் சொல் கழுவப்படாமல்

சுவரெங்கும் புரையோடிக் கிடக்கிறது

வஞ்சகத்தைக் குழைத்து வாலாட்டிய சொல்

கடித்துக் குதறி விட்டுப் போன சம்பவம்

ரகசிய கேமராக்களில் பதிவாகி

நாள்பட்டுப் போனதில் அழிந்து போயிருக்கிறது

மௌனத்தை மலரச் செய்து சங்கடப்படுத்தாமல்

சொற்களை உதிர்த்துத் துயரப்படுத்தியதற்காக

உங்களிடம் மன்னிப்பைக் கோருகிறேன்

சொற்களைப் பெருக்கித் தூய்மை செய்வதற்கான

துப்புரவாளர் வரும் நேரம் நெருங்கி விட்டது

குப்பைகளை உங்களிடம் வைத்துக் கொண்டு

அல்லதை வீசி எறிந்து விடாதீர்கள்

குப்பை மேடுகள் மணம் வீசுவது முக்கியமல்ல

நாம் நாறிக் கொண்டிருக்கக் கூடாது

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...