3 Jan 2023

கருணையை வெளிப்படுத்த தொடங்கும் கடவுள்

கருணையை வெளிப்படுத்த தொடங்கும் கடவுள்

நம்பிக்கையோடு வேண்ட செல்லும் இடத்தில்

நம்பிக்கையில்லாமல் பாதணிகளை விட்டுச் செல்ல வேண்டியதாகிறது

நான்கு சுவர்களில் சிறைபட்டு

காலம் முழுவதும் கடவுள்

வேண்டுதல்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்

எத்தனை வேண்டுதல்களை நிறைவேற்றியிருப்பீர்

என்ற கேள்விக்கு எந்தவித சலனமில்லாமல்

பதிலை வெறுத்தவர் போல அமர்ந்திருக்கும் கடவுளிடம்

அதற்கு மேல் கேட்க என்ன இருக்கிறது என்று

வேண்டுதல்களை அப்படியே விட்டு வெளியேறுகிறேன்

அதுவரை வெளியில் கிடந்த

பாதணிகளைப் பாதுகாத்து வைத்திருந்த கடவுளுக்கு

கண்ணீர் மல்க நன்றி செலுத்துகிறேன்

அதனையடுத்து அதற்கு மேல்

பாதணிகளைத் திருட முடியாத விரக்தியில்

தன்னைச் சபித்து விட்டுப் போகும்

ஒரு திருடரின் மேல் தன் கருணையை

வெளிப்படுத்தத் தொடங்கியிருக்க வேண்டும் கடவுள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...