3 Jan 2023

சுடலையில் தணிக்கும் தீ

சுடலையில் தணிக்கும் தீ

நெருப்புக்கு இடம் கொடுத்த விறகு

கரியாகி வருத்தப் பட்டது

நெருப்புக்கு இடம் கொடுத்த கரி

நெருப்பாகிக் கரியாகி நெருப்பாகி கரியாகிப் போனது

எரிந்த பின் எல்லாம்

சாம்பலின் மிச்சம்

சாம்பலுக்கும் பேதமுண்டு

அஸ்தி என்றும் பஸ்பம் என்றும்

தினம் தினம் எரிந்து அடங்கும்

அடுப்பும் வயிறும்

வாழ்க்கை பெற்றெடுத்த தீயின் சாட்சிகள்

தினம் எரிந்து தினம் அடங்கும் சூரியன்

நாள் கணக்கைச் சொல்லிப் போகிறது

எரிய எரிய இயங்கியபடி

பயணக் கணக்குக் காட்டுகிறது வாகனம்

நெருப்பாற்றில் நீந்தி வந்தவர்கள் குறித்து

ஒலிப்பெருக்கிகள் முழங்குகின்றன

உயிர்ப்புக்கும் நெருப்புக்கும்

உயிர்ப்பான தொடர்பு இருக்கிறது

சுடலையில் தணிக்கும் தீ வந்து எரிக்கும் வரை

*****

No comments:

Post a Comment

அவனவன் கிரகம்!

அவனவன் கிரகம்! இந்த ஜோதிடர்கள் ஒவ்வொருவரும் எம்எஸ், எம்டி டாக்டர்களைத் தாண்டி சம்பாதிக்கிறார்கள். ஜோதிடர் ஆவதற்கான நீட் தேர்வு குறித்து அற...