13 Jan 2023

சந்திப்புகளைச் சந்தியுங்கள்

சந்திப்புகளைச் சந்தியுங்கள்

பதற்றமாக இருந்தால்

தெருவில் இறங்கி நடந்து செல்லுங்கள்

கண்ணில் படுபவர்களிடம் எல்லாம்

நலமா என விசாரியுங்கள்

பரபரப்பாக இருந்தால்

உடனே ஊர் சுற்றக் கிளம்புங்கள்

எதிரில் வருபவர்களிடம்

ஒரு கதைச் சொல்லச் சொல்லுங்கள்

படபடப்பாக இருந்தால்

மனிதர்களை நோக்கிப் புறப்படுங்கள்

உதவி தேவைப்படுபவர்களுக்கு

உதவி செய்யுங்கள்

ஆறுதல் தேவைப்படுபவர்களுக்கு

ஆறுதல் சொல்லுங்கள்

உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும்

மக்களிடம் செல்லுங்கள்

மக்களுடன் பேசுங்கள்

மக்களுடன் பழகுங்கள்

மக்களுடன் சிரியுங்கள்

மக்களுடன் அரட்டை அடியுங்கள்

ஒரு தேநீர் அருந்துங்கள்

சிற்றுண்டி சாப்பிடுங்கள்

இப்போது திரும்பி வாருங்கள்

உங்கள் பிரச்சனை கண்ணில் பட்டால்

இப்படியொரு வழியைச் சொன்னதற்காக

என்னிடம் சண்டைக்கு வாருங்கள்

சந்தோஷமாகச் சண்டைப் போட்டுக் கொள்வோம்

எந்த நேரமும் இனிய நேரமாகட்டும்

சந்திப்பின் முன் சக்தியிழந்து நிற்கக் கூடியவைக்கு

பிரச்சனைகள் என்று பெயர்

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...