13 Jan 2023

கணங்கள் பிறப்பது உனக்காக

கணங்கள் பிறப்பது உனக்காக

போனால் திரும்பி வராதது எது என்றால்

உயிர் என்கிறாய்

அஃதில்லை என்றால்

மானம் என்கிறாய்

அஃதுமில்லையென்றால்

பெயர் புகழ் கௌரவம் பெருமை என்று

ஏதேதோ சொல்கிறாய்

அவையும் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்

ஆனால் போனால் திரும்பி வராதது பற்றி

நீ அறிந்து கொள்ள வேண்டும்

அது இந்தக் கணம்

இக்கணம் இப்போது மட்டும்

அது இந்தக் கணம் மட்டும்

மற்றொரு கணம் அது மற்றொரு கணம்

ஒவ்வொரு கணமும் போனால் திரும்பி வராது

எந்த ஒரு கணத்தையும்

எதற்காகவும் எவருக்காகவும் விட்டு விடாதே

ஒவ்வொரு கணமும் உனக்காக

உன் பிறப்பிலிருந்து பிறக்கும்

ஒவ்வொரு கணமும் உனக்காக

*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...