14 Jan 2023

ஒவ்வொரு முறையும் உற்றுப் பார்த்துக் கொண்டேயிரு

ஒவ்வொரு முறையும் உற்றுப் பார்த்துக் கொண்டேயிரு

நீ அவமானப்படுத்தப்படலாம்

அதற்கான வாய்ப்புகள் உலகில் நிறைய இருக்கின்றன

அசிங்கப்படுத்தப்படுவதற்கான

சாத்தியக்கூறுகளும் நிறைய இருக்கின்றன

தாழ்த்தப்படுத்தப்படுவதற்கான காரணங்களும்

நிறைய வகுத்து வைக்கப்பட்டு இருக்கின்றன

உலகில் உனக்கு எது நடந்தாலும்

உற்றுப் பார்த்துக் கொண்டே இரு

உலகம் எப்படி இயங்குகிறது என்பதை

உற்றுப் பார்த்துக் கொண்டே இரு

உலகம் உன்னை எப்படி இயக்க நினைக்கிறது என்பதை

உற்றுப் பார்த்துக் கொண்டே இரு

உலகம் உனக்கு எதைச் செய்தாலும்

ஒரு புன்னகையை வீசி விட்டு

உற்றுப் பார்த்துக் கொண்டே இரு

அதை ஒருபோதும் நிறுத்தி விடாதே

அவமானத்திற்கு அஞ்சி

நிலை குழைந்து விடாதே

உற்றுப் பார்த்துக் கொண்டேயிரு

அசிங்கத்திற்குத் தயங்கி

பின்வாங்கி விடாதே

உற்றுப் பார்த்துக் கொண்டிரு

தாழ்வுக்கு அடிபணிந்து

தலை குனிந்து விடாதே

உற்றுப் பார்த்துக் கொண்டேயிரு

நீ என்ன செய்ய வேண்டும் என்பதை அது சொல்லும்

நீ உற்றுப் பார்ப்பதைத்தான் தடை செய்கிறார்கள்

என்பதைப் புரிந்து கொண்டு

ஒவ்வொரு முறையும் உற்றுப் பார்த்துக் கொண்டிரு

உற்றுப் பார்த்துக் கொண்டேயிரு

*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...