17 Jan 2023

சிறிதில் துவங்கும் பெரிதின் சூட்சமம்

சிறிதில் துவங்கும் பெரிதின் சூட்சமம்

முதல் அடி முக்கியம்

துவங்காமல் ஆரம்பமாவது எது

ஆயிரம் இலைகளைப் பரப்பியிருக்கும் மரம்

முதல் இலை துளிர் விட

ஒவ்வொரு இலையாய் முளைக்கத் தொடங்கியிருக்கும்

ஏற்றப்படும் ஒவ்வொரு விளக்குக்கும்

மரியாதை கொடுத்து விலகுகிறது இருள்

எடுத்து வைக்கும் ஒற்றைச் செங்கல்லிருந்து

உருவாகின்றன பிரமாண்ட கட்டிடங்கள்

ஒவ்வொரு துளியாய் விழுந்து

வெள்ளமாய் பெருக்கெடுக்கிறது மழை

சிறு சிறு இழைகளைப் பிணைத்துக் கொண்டு

வலுவான கயிறு பிரசவம் ஆகிறது

ஆயிரம் பக்கம் நீளும் கதை

ஒவ்வொரு எழுத்தாக விரியத் தொடங்குகிறது

சிறிதே பெரிதாகிறது

துளியே உயிராக உருவாகிறது

சிறிய துவக்கத்தில் இருக்கிறது

பெரிய காரியங்கள் சூட்சமம்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...