17 Jan 2023

அன்பின் ஒலிப்பு

அன்பின் ஒலிப்பு

ஒவ்வொரு முறையும் சண்டை போடுவதற்காக

நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்

அன்பாகத் துவங்கி உக்கிரமா உரையாடுவது

நமக்குப் பழக்கமாகி விட்டது

நாம் சந்தித்துக் கொண்டால்

பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது என்று

உலகம் பேசத் தொடங்கி விட்டது

ஏதோ ஒன்று உன்னிடமோ அல்லது என்னிடமோ

மாறியாக வேண்டும் என்று தோன்றுகிறது

இந்த முறை சந்தித்த போது

நீ நிறைய பேசிக் கொண்டே போன போது

நான் எதுவும் பேசாது இருந்தேன்

என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறிய போது

என்னிடம் ஒரு புன்னகை மட்டும் பாக்கியிருந்தது

அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியாது

என்னை மிகவும் பிடித்திருப்பதாய்ச் சொன்னாய்

வார்த்தைகள் வற்றிப் போகுமிடத்தில்

அன்பு ஊற்றெடுக்கும் என்று

அசரீரி ஒலிக்கத் தொடங்கியது அப்போது

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...