14 Jan 2023

நாவில் ஒளிந்திருக்கும் பிரச்சனைகள்

நாவில் ஒளிந்திருக்கும் பிரச்சனைகள்

உடல் பருமன் பற்றி மிகவும் கவலைப்பட்டாய்

உணவைக் கொட்டி உன்னைப் பெருக்க வைப்பதாய்

உன்னைச் சுற்றியுள்ளவர்கள் பற்றிப் புகார் சொன்னாய்

ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்யும் நேரத்தை

விழுங்கி ஏப்பமிடுவதாக எரிச்சல் பட்டுக் கொண்டாய்

என்றோ ஒரு நாள் சர்க்கரையோ மாரடைப்போ

வந்து சேரப் போகிறதென்று புலம்பித் தள்ளினாய்

எதுவும் சொல்லாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த

என்னைப் பார்த்து

உன்னிடம்தான் சொல்கிறேன் செவிடா என்று கத்தத் தொடங்கினாய்

நான் ஏதாவது சொல்ல வேண்டும் என்று

நீ எதிர்பார்ப்பது புரிந்ததும்

என் நாக்கு உன் காதுகளிடம் சொன்னது

உன் பிரச்சனை மொத்தமும்

உன் நாவில் ஒளிந்திருக்கிறது

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...