20 Jan 2023

நீ என்பது உன் மனதின் பிரதிபலிப்பு

நீ என்பது உன் மனதின் பிரதிபலிப்பு

இந்த உலகம்

உன் மன பிரதிபலிப்புகளால் ஆனது

இந்த வாழ்க்கையை

நானே தீர்மானிக்கிறேன் என்கிறாய்

உன் மன எதிரொளிப்புகளை

நீ என்று நம்பிக் கொண்டிருக்கிறாய்

நீ அமைதியில்லை எனப் புலம்பும் போது

உன் மன பிம்பங்கள் ஒவ்வொன்றும்

உடைந்து உடைந்து முடிவிலியாய்

உடைந்ததைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது

உறங்கினால் மட்டும் என்ன

உன் மனம் கனவுகளில்

எதிரொளிப்புகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது

பிரதிபலிக்காத மனம் கிட்டுமா என்கிறாய்

அதன் பேர் ஞானம் என்கிறார்கள்

அதன் பிறகு நீ எதையும் எதிரொளிப்பதில்லை

நீயொரு சூன்யமாகி விடுகிறாய்

சும்மா இரு என்பது உனக்கல்ல

உன் மனதின் எதிரொளிப்புகளுக்கு

உன் மனம் செத்து விட்டால் உனக்கேது பிரதிபலிப்பு

நான் என்பது தெறித்து விழும் போது

நீ செத்து விடுகிறாய்

நீ என்பது உன் மனதின் பிரதிபலிப்பு

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...