20 Jan 2023

மனநாயின் வேட்டையும் ஆறுதலும்

மனநாயின் வேட்டையும் ஆறுதலும்

ஏதோ ஓர் ஆறுதல்

எங்கேனும் கிடைத்தால்

ஒரு கறித்துண்டு அளவுக்கு

வாங்கிப் போடுங்கள்

இந்த மன நாய்

தின்று விட்டு அமைதி அடையட்டும்

ஒரு சிறு கறித்துண்டுக்காக

மனநாய் நடத்தும் வேட்டை இருக்கிறதே

அது கிடைத்து விட்டால்

ஞான வெளிச்சம் தரும்

கம்பத்தின் அடியில்

சிறுநீர் கழித்து விட்டு

நிசப்தமான நள்ளிரவில்

நான்கு பேரின் நல்ல தூக்கத்தை

குரைத்துக் கெடுத்து விட்டு

நிம்மதியாகப் படுத்துக் கொள்ளும்

மனிதரின் மனக்கறியைத் தேடித் தின்னும்

மனநாய்

*****

No comments:

Post a Comment

சங்கடத்தின் பின்னுள்ள காரணங்கள்

சங்கடத்தின் பின்னுள்ள காரணங்கள் எவ்வளவோ விளக்கங்கள் எத்தனையோ தத்துவங்கள் எண்ணிச் சொல்ல முடியாது அவ்வளவு ஆறுதல்கள் அத்தனை அழுகைகள் ...