தயவுசெய்து கேள்வி கேட்காதீர்கள்
பசிக்குச் சாப்பிடுகிறோம்
இதில் புரதச் சத்து எங்கே
இருக்கிறது
மாவுச் சங்கே எங்கே இருக்கிறது
உயிர்ச்சத்துகள் இருக்குமிடமும்
தெரிந்த பாடில்லை
இது எங்கே விளைந்தது
எங்கே யார் சமைத்தது எதுவும்
தெரியாது
பசிக்கிறது சாப்பிடுகிறோம்
மீண்டும் பசி வந்தால் சாப்பிடுவோம்
என்று சொல்ல முடியாது
பசி வரும் நேரத்தில்
கிடைத்தால் சாப்பிடுவோம்
கிடைக்கா விட்டால்
ஒழுகும் எச்சிலில் பட்டினியை
லபக் லபக் என்று விழுங்கிக்
கொள்வோம்
இடைப்பட்ட நேரம் முழுவதும்
எதையோ தேடி ஓடிக் கொண்டிருப்போம்
எங்களை நிறுத்தி
தயவு செய்து கேள்வி கேட்காதீர்கள்
எங்களுக்கு எப்போதோ கிடைக்கும்
சாப்பாட்டில்
எது இருந்து என்னவாகப் போகிறது
எது இல்லாமல் இருந்து என்னவாகப்
போகிறது
ஏதோ கிடைக்கிறதா அது போதும்
*****
No comments:
Post a Comment