16 Jan 2023

ஒரு கடவுள் செய்வது

ஒரு கடவுள் செய்வது

நான் அந்தத் தவறைச் செய்தேன்

மீண்டும் மீண்டும் செய்தேன்

திரும்ப திரும்ப உனக்கே செய்தேன்

ஒவ்வொரு முறை செய்யும் போது

கடவுள் உன்னைக் காப்பாராக என்றாய்

நான் செய்வதற்கு உன் கடவுள்

என்னைத் தண்டிக்க வேண்டும் என்று கத்தினேன்

அப்போதும் கடவுள் எப்போதும் உன்னைக் காப்பார் என்றாய்

உன்னைக் காத்து என்னைத் தண்டிக்காத

கடவுளென்ன கடவுள் என்று உன்னை நிந்தித்தேன்

தண்டிப்பவர் கடவுள் இல்லை என்றாய்

உன்னைக் காப்பவரும் கடவுள் இல்லையோ என்றதற்கும்

ஆம் என்றாய்

வேறெதற்குதான் உன் கடவுள் என்ற போது

கருணையோடு இருப்பதற்கு மட்டும் கடவுள் என்றாய்

என் கடவுளே என்னை மன்னித்து விடுங்கள் என்று

உன்னைப் பார்த்து இறைஞ்ச தொடங்குகிறேன்

கருணையோடு ஒரு பார்வையில் கடந்து போகிறாய் நீ

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...