16 Jan 2023

என்னைச் சரி செய்து கொள்ளுதல்

என்னைச் சரி செய்து கொள்ளுதல்

நான் என் எண்ணங்களைச் சரி செய்து கொள்கிறேன்

நேரில் நேசம் பொங்க பேசியவரை

கனவில் கொலை செய்கின்றன எண்ணங்கள்

நிஜத்தில் வம்பிழுத்தவரை

என்றோ ஒரு நாள் கனவில் ஆரத் தழுவிக் கொள்ளத்தான் போகிறேன்

இப்படியும் அப்படியுமாகக் குதியாட்டம் போடும் எண்ணங்களுக்காக

உன்னை நிந்திக்கப் போவதில்லை

உன்னோடு சண்டை போடப் போவதில்லை

எண்ணங்கள் அடங்கிப் போனால்

எல்லாம் அமைதியாகும் என்பது தெரிகிறது

எண்ணங்கள் தவறாகும் போது மட்டும் எச்சரிக்கையாகிறேன்

என் முன் துரோகிகள் வந்து நின்று விடக் கூடாது

என் துரோகிகளே என்னிடமிருந்து எடுத்துச் செல்ல

என் அன்பைத் தவிர என்னிடம் வேறு ஏதுமில்லை

உங்களைத் தண்டித்துக் கனவிலும் விரோதியாகி விடக் கூடாது என்று

ஒவ்வொரு முறையும் பிரார்த்திக் கொள்கிறேன்

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...