15 Jan 2023

நன்றி செலுத்தவே வாழ்கிறேன்

நன்றி செலுத்தவே வாழ்கிறேன்

உனக்கு நன்றி செலுத்தவே வந்திருக்கிறேன்

நீ என்னை கொலை செய்ய முயன்றவன் என்றார்கள்

அதனாலென்ன உனக்கு நன்றி சொல்லக் கூடாதா

நன்மைக்குச் சொல்வதுதான் நன்றி என்று என்னை மறித்துப் பார்த்தார்கள்

அதனாலேன்ன தீமைக்கும் நன்றி சொல்லக் கூடாதா

என் நன்றி ஏற்கப்படாது என்றார்கள்

அதனாலென்ன நீயென் நன்றியைத் தூக்கி எறிந்து விடவா போகிறாய்

அப்படித்தான் ஆகும் என்றார்கள்

அதனாலென்ன அப்படியே ஆகட்டும்

ஒரு நன்றியை ஏன் விரயமாக்க வேண்டும் என்றார்கள்

அதனாலென்ன கொடுக்க கொடுக்க குறைவதா நன்றிகள்

என்றாலும் அது எப்படி முறையாகும் என்றார்கள்

அதனாலென்ன நன்றியென்ன கோபித்துக் கொள்ளவா போகிறது

இருந்தாலும் நன்றி சொல்வதற்கு முன் கொஞ்சம் யோசியுங்கள் என்றார்கள்

அதனாலென்ன எதற்கும் சொல்லப்படுவதுதான் நன்றி போய் வாருங்கள்

*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...