2 Jan 2023

இலக்கா முழக்கங்கள்

இலக்கா முழக்கங்கள்

அனைவரும் சேர்ந்து மரங்களை நடுவோம்

நட்ட மரங்களை

நட்ட கல்லுக்குப் பொறுப்பானவர்கள்

குத்தகைக்கு விடட்டும்

தேவையெனில் வெட்டுவதற்கான

அனுமதியும் வழங்கட்டும்

போதும் என்பதால் சொல்கிறார்கள்

காடுகளை அழித்து விட்டு

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்

சிநேகமாகப் பேசுவதற்காகத் தழுவுவதற்காக அன்றி

மழை பெய்ய மரம் வளர்ப்போம்

பறவைகள் ஏதேனும் வந்தமர்ந்தால்

கல்லெடுத்து விரட்டுவோம்

அவசியமெனில் இலக்கா துப்பாக்கிகளின்

உரிமம் பெற்று

டொப் டொப் ஆலாபனை வாசிப்போம்

எச்சமிடும் பறவையும்தான் மரம் நடுகிறது

நீ என்னவோ வந்து விட்டாய்

மரத்தை நட்டு விட்டுப் பெரிதாய்ப் பீற்றிக் கொள்ள

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...