2 Jan 2023

எரிமலையினின்று உருள்வது

எரிமலையினின்று உருள்வது

நடுநிசி நேரத்தில் கதவு உடைபடுவது போல

உறங்கா ஓர் இரவில் விழிப்பு தட்டுகிறது

எத்தனை இரவுகளில் நிம்மதியாக உறங்கியிருப்பேன்

பிரக்ஞையோடு இருப்பதன் விபரீதம்

கனவுகளில் பிரக்ஞையற்று போவதின் நன்மை

இரவில் திறந்து கொள்ளும் விழிகளில் உருள்கிறது

உறக்கம் வராதா எனக் காத்திருக்கையில்

உறக்கத்தின் மீது ஒரு ஆகப் பெரும் மரியாதை வருகிறது

கூடவே உறங்க விடாத மனதின் மீது கோபமும்

சிறு குழந்தையின் கேவலைப் போல இறைஞ்சுகிறது

எத்தனையோ இரவுகள்

உறங்கிக் கழித்தவை என்று

எவ்வளவு எளிதாய் நினைத்திருந்திருக்கிறேன்

உறங்காமல் போயிருக்கும்

ஒவ்வொரு இரவின் நரகமும்

காது மடல் விளிம்பில் சாணை தீட்டுகின்றன

அப்போதெல்லாம் எப்படி உறங்கினேன்

இப்போது எப்படி உறங்கப் போகிறேன்

எதுவும் தெரியாது

ஆனால் உறங்க வேண்டும்

எப்படியோ உறங்கினால் போதும்

இந்த இரவும் கடந்து போகும்தான்

உறங்காமல் கடந்து போவது

தீக்குழம்பைக் கக்கும்

எரிமலையினின்று உருள்வது போலிருக்கிறது

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...