7 Jan 2023

கடந்து போகும் வாழ்க்கைச் சாலை

கடந்து போகும் வாழ்க்கைச் சாலை

ஆடைகள் ஒரு பொருட்டில்லை

வயிற்றுப்பாடும் முக்கியமில்லை

கோடை குளிர் மழை

எது குறித்த எந்தப் பிரக்ஞையுமில்லை

ஒரு கோப்பைத் தேநீரோ

ஒரு பொட்டல உண்பண்டமோ கிட்டினால்

கடவுளரின் வரம் கிட்டியது போன்ற பேரானந்தம்

எதுவும் கிட்டாதாயினும்

தெருநாயைக் கட்டியபடி உறங்குவதில் பரம சந்தோசம்

மனிதர்கள் கொடுக்க தவறிய

மகிழ்ச்சியை

மனிதர்களினின்று கழன்று எடுத்துக் கொள்ளும்

மனம் பிறழ்ந்த மனிதர்களில் ஒருவரையேனும்

ஒவ்வொரு ஊரிலும் தரிசித்தபடி

கடந்து போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கைச் சாலை

*****

No comments:

Post a Comment

ஒரு நேரத்தில் ஒன்று!

ஒரு நேரத்தில் ஒன்று! ஒரு நேரத்தில் ஒரு விசயம் ஒரு நேரத்தில் ஒரு தாவல் ஒரு நேரத்தில் ஒரு நிலை ஒரு நேரத்தில் ஒரு படி ஒரு நேரத்தில் ஒ...