8 Jan 2023

தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் அன்பு

தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் அன்பு

பிரிவுத்துயரைச் சொல்லும் வார்த்தைகளில்

கண்ணீரைப் பிரசவித்தபடி

நம்மை எப்போதும் இணைத்தபடி இருக்கும் என்று

கையிலிந்த அலைபேசியைத் திணித்தாய்

வார்த்தைகளை நம்பி விடைகொடுத்த எனக்கு

நீ தந்த அலைபேசி

அழைக்க நினைக்கும் போதெல்லாம்

வாடிக்கையாகச் சொல்கிறது

நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் வாடிக்கையாளர்

தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்

நல்லது அப்படியே இருக்கட்டும்

தொடர்பு எல்லைக்கு அப்பால் போவதற்கு முன்

நீயென்னை ஒரு முறை அழைத்திருக்கக் கூடாதா என்னன்பே

*****

No comments:

Post a Comment

ஒரு நேரத்தில் ஒன்று!

ஒரு நேரத்தில் ஒன்று! ஒரு நேரத்தில் ஒரு விசயம் ஒரு நேரத்தில் ஒரு தாவல் ஒரு நேரத்தில் ஒரு நிலை ஒரு நேரத்தில் ஒரு படி ஒரு நேரத்தில் ஒ...