7 Jan 2023

மாற்றம் குறித்த ஒரு விமர்சனம்

மாற்றம் குறித்த ஒரு விமர்சனம்

அவர் மனநிலை எப்போது எப்படி இருக்குமோ

அப்படி மாறிக் கொள்கிறார்

அவர் மாறிக் கொள்வதும்

மாறாமல் இருப்பதும் அவர் இஷ்டம்

நீங்கள் சொல்வதும் நியாயம்தான்

உங்கள் விருப்பப்படி மாறிக் கொள்ளும்

உங்களை எப்படி விமர்சிக்க முடியும்

அப்படி விமர்சித்தால்

என் விருப்பப்படி நான் மாறிக் கொள்வதை

நீங்கள் விமர்சிக்கக் கூடும்

என் விருப்பப்படி மாறிக் கொள்ளும் என்னை

நீங்கள் விமர்சிக்காமல் இருக்க

உங்கள் விருப்பப்படி மாறிக் கொள்ளும் உங்களை

விமர்சிக்காமல் இருப்பது நல்லது

இருப்பினும் இதில் ஒன்று இருக்கிறது

நீங்கள் மாறிக் கொள்ளும் அவரைப் பற்றிய

உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்

கடவுள்தான் சாத்தானாக மாறிக் கொள்கிறார்

சாத்தான்தான கடவுளாக மாறிக் கொள்கிறார்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...