6 Jan 2023

வெளிச்சத்தை அறுக்கும் பூச்சிகள்

வெளிச்சத்தை அறுக்கும் பூச்சிகள்

விளக்கைப் போடுகிறேன்

வெளிச்சத்தை அறுத்தெடுப்பது போன்ற

ரீங்காரத்தோடு

பூச்சிகள் பறக்க தொடங்குகின்றன

இரவுகள் பூச்சிகளுக்கானவை

அறுபடும் வெளிச்சத்தின்

குருதி சுவை பிடிக்காது

இரவின் திரையை இறக்குகிறேன்

இருள் சூழ்ந்ததும்

தட்டுப்படும் வெளிச்சக் கீற்றின்

தடம் தோய்ந்த திசை நோக்கி

இன்னொரு விளக்கைப் போடுபவனைத் தேடி

ஓடுகின்றன பூச்சிகள்

இரவின் கருப்போடு

உறங்கத் தொடங்குகிறேன்

கனவுகளில் பறக்கத் தொடங்குகின்றன

பூச்சிகள்

கனவின் விளக்கைப் போட்டது யாரோ

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...