6 Jan 2023

எல்லாம் என் பூனைகள்

எல்லாம் என் பூனைகள்

குட்டிகளை வாயில் கவ்விக் கொண்டு அலையும்

பூனைகள்

எப்படியோ உன்னை ஞாபகப்படுத்தி விடுகின்றன

எலிகள் தின்பதற்கான நெல் இல்லாத வீட்டில்

கருவாட்டு வாசனைக்கு

ஏங்கும் பூனையைப் போன்ற தவிப்பு எனக்கு

தெருவெங்கும் ஓடும் பெருச்சாளிகள் குறித்த

கவலையேதுமின்றி படுத்துக் கிடக்கிறது

பரண்மேல் பத்திரமாக என் வீட்டுப் பூனை

என் வீட்டுப் பூனையின் துணை தேவையில்லாமல்

போய் விட்டது

குட்டி ஈன்று விட்ட பக்கத்து வீட்டுப் பூனைக்கு

ஒவ்வொரு பூனையும் ஏன் அலைகிறது

ஏன் உறங்கிக் கொண்டே இருக்கிறது

திடீரெனக் கண்ணில் படாமல் போகிறது

அங்கும் இங்கும் ஓடித் தொலைகிறது

விழிகள் மருளும் மற்றம் உருளும்

பூனைகளின் இயக்கத்தின் நோக்கம்தான் என்ன

எனக்கொன்றும் புரிந்தபாடில்லை

எல்லாம் என்னுடைய மனப்பூனைகள்தான் என்ற போதிலும்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...