21 Jan 2023

அவரவர் வாழ்க்கை அவரவர்க்குரியது

அவரவர் வாழ்க்கை அவரவர்க்குரியது

சோதனைகள்தான் களம்

வடிவங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன

ஊர்தோறும் குடியேறி பல நாடகங்களைப் பாருங்கள்

உலகமே நாடகமேடை எனும் போது

ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு நாடகக் காட்சிகள்

ஒரு நல்ல நாடகம் உங்களை மாற்றி விடலாம்

மோசமான நாடகமும் உங்களை மாற்றாமலா போய் விடும்

உங்கள் நண்பர்களோ பகைவர்களோ

ஏதோ ஒரு பக்கத்தில்

ஏன் உங்கள் அருகில் கூட பெருகிக் கொண்டிருக்கலாம்

ஒரே மாதிரியாக வாழ்வதின் அலுப்பிலோ சலிப்பிலோ

நீங்கள் தற்கொலை பற்றிக் கூட சிந்திக்கலாம்

தனியாக வாழ்வது பொருத்தமெனவோ

துணையோடு வாழ்வது உசிதமெனவோ

நீங்கள் ஒரு முடிவுக்கு வரலாம்

எது எப்படியோ

அது உங்களுக்குப் பிடித்தமான வாழ்க்கை

அதை அப்படியே வாழுங்கள்

உங்களுக்குப் பிடித்தமான வாழ்க்கை

மற்றவர்களுக்குப் பிடித்தமான வாழ்க்கையாக இருக்கும்

என்று பிரசங்கிக்காதீர்கள்

அவரவர்களுக்கும் பிடித்தமான வாழ்க்கையை

அவரவர்களும் கண்டு கொள்வார்கள்

நீங்கள் கொஞ்சம் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்ளுங்கள்

அத்துடன் கருத்து கூறாமலும் ஒதுங்கிக் கொள்ளுங்கள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...