21 Jan 2023

விலகிச் சேர்ந்திருக்கும் அபூர்வங்கள்

விலகிச் சேர்ந்திருக்கும் அபூர்வங்கள்

அன்றொரு நாள் சந்தித்த போது

எதேச்சையாகக் கேட்டாய்

பிறகு எப்போதேனும் சந்தித்தோமா

வேறு ஏதேனும் விவரங்கள் தெரியுமோ

அலைபேசி எண் தந்தால் பேசுவாயோ

ஒரு முறை சென்று பார்க்காலாமோ

ஒரு முறை பிரிந்த உறவை

எப்படியெல்லாமோ ஒட்ட வைக்க நீயும் முயற்சித்தாய்

ஒட்டியிருப்பதென்றால்

எப்போதோ ஒட்டியிருக்க வேண்டும்

திடீரென்று ஒரு முற்றுப்புள்ளி

அப்படி விழும் என்று யார் எதிர்பார்த்தார்கள்

விழுந்தது விழுந்து விட்டது

அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்

அதற்கு மேல் எனக்கேதும் தெரியவில்லை

தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை

உறவோடிருந்த நாட்களின் பசுமை

எப்போதும் கருகி விடாது என்பதை மட்டும் சொல்

அத்துடன்

புதிய தளிர்கள் துளிர்க்காது என்பதையும் சேர்த்துச் சொல்

விலகியபடி சேர்ந்திருக்கும் அபூர்வங்களுடனே

பூமி எப்போதும் சுழன்று கொண்டிருக்கட்டும்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...