22 Jan 2023

பத்திலக்க எண்ணைக் கடன் வாங்குதல்

பத்திலக்க எண்ணைக் கடன் வாங்குதல்

துவக்கம் எப்படியோ

முடிவும் அப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது

தவணைத் தொகையில்

அலைபேசி வாங்கிய காலந்தொட்டு

கடன் வாங்கச் சொல்லி அழைத்தார்கள்

கடன் வாங்கிய பிறகு

கடனைக் கட்டச் சொல்லி அழைத்தார்கள்

ஏனிப்படி என்று நிதானமாக யோசித்துப் பார்த்த போது

அலைபேசி இல்லாத காலத்தில்

நான் கடன் வாங்கியிருக்கவில்லை

தொலைபேசியில் அழைத்துக் கூட

யாரும் எனக்கு எந்தக் கட்டளையும் இடவில்லை

அலைபேசியை வாங்கிய அந்த நேரத்தில்

நான்தான் உணராமல் இருந்திருக்கிறேன்

பத்திலக்கத்தில் ஓர் எண்ணை கடன் வாங்கியிருக்கிறேன்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...