19 Jan 2023

உங்கள் அர்த்தங்களில் வாழும் நான்

உங்கள் அர்த்தங்களில் வாழும் நான்

எனக்கு உங்களிடம்

எதுவும் சொல்லப் பிடிக்கவில்லை

நான் ஓர் அர்த்தத்தில் சொல்கிறேன்

நீங்கள் ஓர் அர்த்தத்தில் புரிந்து கொள்கிறீர்கள்

உங்கள் அர்த்தத்தை வைத்துக் கொண்டு

என் மீது அவதூறு பரப்புகிறீர்கள்

உங்கள் அவதூறுகளுக்கு எதிரான

என் விளக்கங்களை ஏற்க மறுக்கிறீர்கள்

எதுவும் சொல்லாமல் அமைதி காப்பது

உங்களைப் பிரதிவினையாற்ற விடாது செய்து விடுமென

அதுவும் கூடாதென்கிறீர்கள்

உங்கள் அர்த்தங்களை

ஓர் அடிமை போல ஏற்க வேண்டுமென்கிறீர்கள்

என்னை ஏதாவது சொல்ல வைத்து

அதில் என்னை உங்களின் அடிமையாக்குவதில்

அப்படியொரு பேரானந்தம்

அதற்கெனவே என் அர்த்தங்களோடு வாழ முடியாத

வன்முறையைத் தயார் நிலையில் வைக்கிறீர்கள்

உங்கள் அர்த்தப்பாடுகளுக்கு ஏற்ப

என்னை மாற்றியமைத்துக் கொள்கிறீர்கள்

என் அர்த்தங்களைக் கொன்று

உங்கள் அர்த்தங்களின் வன்புணர்வில்

பழக்கி வைக்கிறீர்கள் உங்களுக்கான என் வாழ்க்கையை

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...