19 Jan 2023

கணக்கை நேர் செய்யுங்கள் கனவான்களே

கணக்கை நேர் செய்யுங்கள் கனவான்களே

இந்தத் துப்பாக்கிச் சூடு வன்முறையைத் தடுப்பதற்காக என்றார்கள்

வன்முறையே நடக்காத களத்தைச் சுட்டிக் காட்டி

சுமார் 270 தடவை முறை வைத்துச் சுட்டுத் தள்ளினார்கள்

240 பேர் சம்பவ இடத்தில் பலியானர்கள்

30 பேர் படுகாயம் அடைந்தார்கள்

ஒரு கவிதைக்குரிய உணர்ச்சியின்றி

இது புள்ளி விவரம் போலத் தோன்றலாம்

சுடப்பட்ட எவரும் முன்பக்கம் குண்டடிப்படவில்லை

உயிர் பிழைக்க தப்பியோடிய போது

பின்பக்கம் குண்டடிப்பட்டவர்கள் என்பது

உங்களுக்கு ஓர் அறிக்கையைப் போலத் தோன்றலாம்

பிறகேன் சுட்டார்கள் கொன்றார்கள் என்றதற்கு

துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பொழுது போகவில்லை என்றார்கள்

உயிர் பிழைத்துப் படுகாயம் அடைந்தார்களே

அந்த முப்பது பேரை ஞாபகம் இருக்கிறதா

எங்களுக்கு மட்டும் சாவதற்கு உரிமையில்லையா என்று அவர்கள்

விசாரணை ஆணையத்திற்குக் கடிதம் எழுதுகிறார்கள்

அடுத்த முறையாவது படுகாயம் அடையாமல்

சரியாக உயிரெடுக்க

உங்கள் துப்பாக்கிச் சுடும் காவலர்களுக்குப் பயிற்சி கொடுப்பீராக

உங்களுக்கு குண்டு கணக்கும் சாவு கணக்கும் நேராவதாக

எங்களுக்கும் நரக வாழ்க்கை இல்லாமல் போவதாக

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...