25 Jan 2023

ஜென்மாந்திரக் கதைகள்

ஜென்மாந்திரக் கதைகள்

போன ஜென்மத்து நினைவுகளோடு

இந்த ஜென்மத்தில் இருக்கும்

ஒருவர் உங்கள் கண்களில் பட்டால்

நீங்கள் என்ன செய்வீர்கள்

எனக்கு அவரிடம் கேட்க

நிறைய கேள்விகள் இருந்தன போலத் தோன்றி

இப்போது ஏதும் இல்லை என்பது போலத் தோன்றுகிறது

போன ஜென்மத்திற்கான அனைத்தும்

வரலாறாக எழுதி வைக்கப்பட்ட பின்பு

அவர் என்ன பெரியதாகப் பிதற்றப் போகிறார்

மறுஜென்மம் குறித்து அவர் ஏதோனும் சொன்னால்

உபயோகமாக இருக்கும் என்றாலும்

நானென்ன பெரிதாக மாற்றி விட முடியும்

இந்த ஜென்மத்திற்குரியதைச் சொல்பவர்கள்

யார்தான் இருக்கிறார்கள்

ஒவ்வொரு ஜென்மத்திலும் நடக்கும்

அக்கிரமங்களுக்கு அந்த ஜென்மத்தில்

பரிகாரம் கிடைக்காத போது

 அதைப் பிறிதொரு ஜென்மத்தில்

பிதற்றித்தான் என்ன பிதற்றாமல் இருந்ததுதான் என்ன

நான் போன ஜென்மத்துக் கதைகளை

மூட்டை கட்டி வைக்கச் சொல்கிறேன்

மறுஜென்மத்துக் கதைகளை

நிர்தாட்சண்மாய் மறுதலிக்க விரும்புகிறேன்

இந்த ஜென்மத்துக் கதைகளை மட்டும்

எழுதிக் கொண்டிருக்கிறேன்

எழுதிக் கொண்டே இருக்க விரும்புகிறேன்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...