24 Jan 2023

உங்கள் அழகான பொய்களைச் சொல்லத் துவங்குங்கள்

உங்கள் அழகான பொய்களைச் சொல்லத் துவங்குங்கள்

உண்மையை விட நடிப்பு

எவ்வளவு அழகாக இருக்கிறது

எவ்வளவு பிரமாதமாக வேலை செய்கிறது

உண்மையைச் சொல்லிக்

காரியத்தைக் குட்டிச் சுவராக்குவதினும்

பொய்களைச் சொல்லி அழகுபடுத்துவது

எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது

அப்படியும் இருக்கலாம் ஆனால்

பண்டங்கள் இருக்கின்றன

பலகாரங்கள் இருக்கின்றன

வாசனை மூக்கைத் துளைக்கிறது

வயிற்றில் அமிலங்கள் ஊறிக் கொண்டிருக்கின்றன

நாக்கில் எச்சில் சுரந்து கொண்டிருக்கிறது

ஆகா என்ன அற்புதமாக

நீங்கள் சாப்பிட்டு விட்டீர்கள்

எழுந்து செல்லுங்கள்

இந்தப் பொய் உங்களை நிறைத்திருந்தால்

நீங்கள் உங்களுக்குப் பிடித்த எல்லா பொய்களையும்

விரும்பிச் சொல்லுங்கள்

விரும்பிச் சொல்லிக் கொண்டிருங்கள்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...