24 Jan 2023

எதிரிகளுக்கான ஆலோசனைகளைத் தயார் செய்யுங்கள்

எதிரிகளுக்கான ஆலோசனைகளைத் தயார் செய்யுங்கள்

நான் ஒவ்வொரு முறை பதறும் போதும்

என் எதிரிகள் அதிக ஆதாயங்கள் அடைகிறார்கள்

என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம்

பதற்றத்தைக் குறைக்க சொல்கிறார்கள்

நான் என்ன செய்வேன் சொல்லுங்கள்

என் எதிரிகளே

என்னால் ஆதாயம் அடைவதை குறையுங்கள் என்கிறேன்

யார் சொல்வதைக் கேட்கும்

மனநிலையில் நானும் இல்லை

நான் சொல்வதைக் கேட்கும்

மனநிலையில் என் எதிரிகளும் இல்லை

நான் பதற்றம் அடைந்து கொண்டிருக்கிறேன்

எதிரிகள் பலன் அடைந்து கொண்டிருக்கிறார்கள்

என்றாவது ஒரு நாள்

பதற்றங்கள் பழகிப் போகாமலா போய் விடும்

அப்போது என் எதிரிகளுக்கான

ஆலோசனைகளை இப்போதே யோசித்துக் கொள்ளுங்கள்

என் பிரியமான நண்பர்களே

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...