23 Jan 2023

இருப்பிலும் இன்மையிலும் கலந்திருக்கும் ஒன்று

இருப்பிலும் இன்மையிலும் கலந்திருக்கும் ஒன்று

ஒரு பிரச்சனையை வெளியில் சொல்கையில்

இன்னொரு பிரச்சனையைக் கொண்டு வருகிறது

சொல்லாமல் போகையில்

கால வெளியில் மறந்து போகிறது

சில பிரச்சனைகளை வெளியில் சொல்லி

சில பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் வேண்டியிருக்கிறது

வெளியில் சொல்ல முடியாமல்

மனப்புழுக்கத்தையும் அனுபவிக்கவும் வேண்டியிருக்கிறது

அனுபவச் செரிமானத்திற்குப் பின்

மரவட்டைகள் போல ஊர்ந்து போகும் பிரச்சனைகளுக்கு

ஏன் அருவருப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது

ஒரு மரவட்டை உன்மேல் ஊர்ந்து போகாத அளவிற்கு

விலகிப் போய்க் கொண்டேயிரு என்று

உள்ளுக்குள் ஒரு குரல் ஒலிக்கத் தொடங்குகிறது

அதுதான் முடிவோ என மருளுகையில்

குரலுக்கு அடங்கிப் போவதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது

அடங்காமல் போவதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது

இருப்பதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கிறது

பிரச்சனையின்மை எதில் இருக்கிறது

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...