10 Jan 2023

எழுத்தெனப்படுவது…

எழுத்தெனப்படுவது…

வார்த்தைகளை உண்டியலில் போடு

சொற்றொடர்களை வங்கியில் சேமி

வாக்கியங்களை முதலீடு செய்

பத்திகளை வியாபாரம் செய்

கட்டுரைகளை ஒட்டுமொத்தமாய் குத்தகை எடு

கவிதைகளை கவர்ச்சி நடனம் ஆட விடு

சிறுகதைகளை சொப்பனங்களிலிருந்து பிடுங்கு

கண்ணில் படும் நான்கு மனிதர்களிடமிருந்து

நாவல்களைக் கைப்பற்று

அவ்வளவுதான் எழுத்து என்றார்கள்

அவ்வளவுதானா எழுத்தே என்றேன்

எனக்கென்ன தெரியும்

நீயே எழுதிக் கொள் என்கிறது எழுத்து

*****

No comments:

Post a Comment

சமநிலைச் சாத்தியங்கள் அசாத்தியங்களா?

சமநிலைச் சாத்தியங்கள்! ஒரு சமநிலையை உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏழைகளைப் பணக்காரர்களாக்க வேண்டுமா? பணக்காரர்களை ஏழைகளாக்க வேண...