9 Jan 2023

அப்படி ஆகுக எனச் சொல்க

அப்படி ஆகுக எனச் சொல்க

ஏதோ ஒன்று ஆக வேண்டும்

டாக்டராக

என்ஜினியராக

டீச்சராக

கலெக்டராக

ஏன் அப்படி ஆக வேண்டும்

ஏனென்றால் அப்படித்தான் ஆக வேண்டும் என்று

அப்பாவின் அப்பா அப்பாவிற்குச் சொல்லியிருக்கிறார்

அம்மாவின் அம்மா அம்மாவிற்குச் சொல்லியிருக்கிறார்

அப்பாவும் அப்படி ஆகவில்லை

அம்மாவும் அப்படி ஆகவில்லை

அப்பாவுக்கும் அம்மாவுக்கும்

நான் அப்படி ஆக வேண்டும்

நான் அப்படி ஆகா விட்டாலும்

என் பிள்ளைகள் அப்படி ஆக வேண்டும்

அவர்கள் ஆகா விட்டாலும்

அவர்கள் பிள்ளைகள் அப்படி ஆக வேண்டும்

யாரோ ஒருவர் அப்படி ஆகி விட்டால்

டாக்டரின் பிள்ளை டாக்டராகி விடுவார்

கலெக்டரின் பிள்ளை கலெக்டராகி விடுவார்

ஆகாதாவரின் பிள்ளைகள்

அப்படி ஆகும் வரை

அப்படி ஆக வேண்டும் என்று

சொல்லிக் கொண்டே போவார்கள்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...