1 Jan 2023

நக்கிக் கொண்டு போ

நக்கிக் கொண்டு போ

வெள்ளம் பெருக்கெடுக்கிறதென

வேதனை படக் கூடாது

புயல் வீசுகிறதென

பதற்ற படக் கூடாது

பூகம்பம் வருகிறதென

பயம் கொள்ளக் கூடாது

எரிமலைகள் கக்குகிறதென

எரிச்சல் படக் கூடாது

நமக்குத் தெரிந்ததை

நாம் செய்வது குறித்து

அவற்றுக்கேதும் லஜ்ஜையில்லை

அவற்றுக்குத் தெரிந்ததை

அவை செய்வது குறித்து

நமக்கேதும் லஜ்ஜை தேவையில்லை

எது வந்தால் எதைச் செய்ய வேண்டும்

என்று அவர்களுக்குத் தெரியாதா

நிவாரணம் கொடுத்தால்

நக்கிக் கொண்டு போ

எல்லாரும் சுரண்டினால்

எதுவும் தாங்காது

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...