1 Jan 2023

ஒவ்வொருவருக்கும் அறிவிப்பு உண்டு

ஒவ்வொருவருக்கும் அறிவிப்பு உண்டு

மரண அறிவிப்பைச் செய்தபடி

ஆட்டோ விரைந்து கொண்டிருக்கிறது

ஆட்டோவில்ருந்து ஒலிக்கப்பட்ட

ஊரின் பெயரோ

தெருவின் பெயரோ

நபரின் பெயரோ

இன்னார் இன்னாருக்கு உறவின் தொடர்புகளோ

நினைவுக்கு வர மறுத்து

அடிமனதில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது

அறியாத ஒருவரின் மரணம்

காற்றில்கலந்த சிற்றோசைப் போல ஆகி விடுகிறது

ஒருவர் மரணித்து விட்டார் என்ற துக்கம்

கடைவிழியில் ஒரு துளிக் கண்ணீரை உருட்டி விட்டுப் போகிறது

இப்போதெல்லாம் ஆம்புலன்ஸைக் கடப்பதைப் போல

ஆட்டோக்களைக் கடக்கும் போதும் தோன்றுகிறது

ஒவ்வொரு மனிதரும் சாக வேண்டியவர்கள்தான்

ஒவ்வொரு மனிதருக்கும் மரண அறிவிப்பைச் செய்ய

ஒரு ஆட்டோ தெருவெங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...