26 Dec 2022

புத்தராகி விட்ட பெண்மரங்கள்

புத்தராகி விட்ட பெண்மரங்கள்

எவ்வளவு சுயநலம் இந்த மனிதருக்கு

பழமாய்த் தின்ன நினைக்கிறார்

அவர் தின்ன நினைப்பதற்காகப் பழுக்க வேண்டும்

அதற்கு முன் காய்க்க வேண்டும்

அதற்கு முன் பூத்திருக்க வேண்டும்

அதற்கு முன் செடியாய்த் தழைத்திருக்க வேண்டும்

அதற்கு முன் விதையிலிருந்து கிளம்பியிருக்க வேண்டும்

அதற்கு முன் வேலிக்குள் இருந்திருக்க வேண்டும்

பழுத்துத் பழுத்துத் தொங்கும் பழங்களை

தின்று கொண்டே

கொட்டைகளைச் சூம்பி விட்டுத்

தூக்கி எறிந்து போகும் மனிதர்களை

சலனமின்றிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன

சலிப்பைத் தொலைத்து விட்ட பெண்மரங்கள்

*****

No comments:

Post a Comment

காலநிலைகளை எதிர்கொள்ளும் விளைச்சல்!

காலநிலைகளை எதிர்கொள்ளும் விளைச்சல்! நெல் என்பது ஒவ்வோராண்டும் ஒவ்வொரு விதமான காலநிலையில் வளர்கிறது. அதன் தலைமுறைகளில் வெவ்வேறு விதமான காலந...