26 Dec 2022

உலகைச் சுழல விடுங்கள் எங்கள் தலைவரே

உலகைச் சுழல விடுங்கள் எங்கள் தலைவரே

தாமதப்படுத்துவது ஒரு செயல் முறை

பதற்றங்களைக் கொண்டு வந்து குவிக்க

மனதுக்குள் வெடிகுண்டைப் பற்ற வைக்க

கடிகார முட்களைப் பின்னோக்கி

இழுத்துக் கொண்டே இருங்கள்

ஆதாயம் அடைவதற்கான வாய்ப்புகளை

அள்ளித் தெளித்தபடி இருக்கும் பதற்றங்களை

எதிர்பார்ப்பு எனும் கருவியில் நுழைத்து

கண்ணில் படுபவர் மீதெல்லாம்

விசிறித் தெளித்து விட்டுக் கொண்டே இருங்கள்

உங்களைப் பெரியவர் என்று உலகம் சொல்லட்டும்

உங்கள் காலடிகளில் விழுந்து வணங்கட்டும்

பதற்றங்களை உருவாக்குவதை நிறுத்தி விடாதீர்கள்

குரைக்கின்ற நாய்க்கு மதிப்பிருக்கிறது

மின்னலைக் கவனிக்க விரும்பாதவர் கூட

இடிச்சத்தத்தைக் கவனிப்பார்

பதற்றங்களைச் சத்தங்களாக மொழிபெயருங்கள்

ஒரு மைக்கை எடுத்துக் கொள்ளுங்கள்

உலகைச் சுழல விடுங்கள் எங்கள் தலைவே

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...