27 Dec 2022

உங்களுக்கு என் காணிக்கை

உங்களுக்கு என் காணிக்கை

எல்லாருக்கும் வெற்றி பிடித்திருக்கிறது

எப்படி ஜெயித்தாலும் ரசிக்கிறார்கள்

தந்திர வெற்றிகளைச் சாகசமாய் ஏற்றுக் கொள்கிறார்கள்

என் வெற்றி என் ஆசையின் வேட்கை என்பதை

எப்படியோ மறந்து விடுகிறார்கள்

எனது வெற்றி அவர்களின் வெற்றியாக மாறி விடுகிறது

மாறி மாறிப் பந்தயம் வைத்துக் கொள்வதில்

என் வெற்றியின் பின்னாலிருக்கும்

ரகசியங்களையும் சூட்சமங்களையும்

கண்டு கொள்ளாமல் கொண்டாடுகிறார்கள்

அவர்களுக்குத் தேவை சந்தோசம்

அதை என் வெற்றிக் கொடுக்கிறது

அவர்களுக்குச் சந்தோசத்தைக் கொடுப்பதற்காகவே

வெற்றிப் பெறுவதாகச் சொல்வதை நம்புகிறார்கள்

என் வெற்றி என் வேட்கை தணிப்பதையும்

என் சுயநலத்தை அதிகரிப்பதையும்

அவர்களிடம் எப்படிச் சொல்வது

நான் சொல்கிறேன்

இந்த வெற்றியால் ஊரும் உலகமும் நலம் பெறுகிறது

நம் லட்சிய வேட்கை நிறைவேறுகிறது

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...