15 Dec 2022

சிங்கத்தின் முன் நிற்றல்

சிங்கத்தின் முன் நிற்றல்

ஒரு சிங்கம்

உங்களை எதுவும் செய்யப் போவதில்லை

அதன் பசித்த பொழுதில்

நீங்கள் அதன் முன் நிற்பது

உங்கள் துரதிர்ஷ்டம்

அதன் பசியடங்கிய பொழுதில்

நீங்கள் அதன் முன் நிற்பது

உங்கள் அதிர்ஷ்டம்

உலகம் அப்போது

உங்களைச் சிங்கத்தை வென்றவர் என்று சொல்லும்

ஒரு சிங்கத்தின் முன்

ரிங் மாஸ்டராய் இருப்பது பரிதாபம்

உலகம் உங்களை வேடிக்கை மட்டுமே பார்க்கும்

*****

No comments:

Post a Comment