16 Dec 2022

இசை எதுவும் செய்யாது

இசை எதுவும் செய்யாது

காற்றைப் பிரித்து இசை என்கிறார்கள்

இசை

அதிர்ச்சி ஊட்டும் என்கிறார்கள்

ஆச்சரியம் செய்யும் என்கிறார்கள்

சந்தோசம் தரும் என்கிறார்கள்

குணப்படுத்தவும் செய்யும் என்கிறார்கள்

ஒரு பறவையின் ஓசை

என்னை எதுவும் செய்வதில்லை

அது இசைக்கிறது

நான் கேட்கிறேன்

எல்லாம் முடிந்து விடுகிறது

உண்மையான இசை

உங்களை எதுவும் செய்யாது

*****

No comments:

Post a Comment