7 Dec 2022

பத்து தலைகள் உருளும் வரலாறு

பத்து தலைகள் உருளும் வரலாறு

பல்லாண்டுகளாய் பூமி பார்த்து சலித்த கதை

பழிக்குப் பழியும்

ரத்தத்தால் எழுதப்படும் கணங்களும்

தேடித் தேடிக் கொலைகள் பல புரிவதும்

காவலர்களின் லத்திகள் சுழல்வதும்

சிறைச்சாலையின் கதவுகள் திறக்கப்படுவதும்

யார் பக்கம் நியாயம் என்பது முடிவாவதற்குள்

பத்து தலைகள் உருண்டோடும்

ராவணன் காலத்துக் கதைகள் போல இருக்கலாம்

யரோ ஒருவரின் குடும்ப பிரச்சனைக்கு

கும்பல் கும்பல்களாய் சண்டைகள் நடந்திருக்கலாம்

இரண்டு தரப்பு எதிரிகள் உருவாக்கப்பட்டிருக்கலாம்

நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற பெயர்கள்

சடுதியில் நிறமாறி விவாதங்கள் சூட்டைக் கிளப்பியிருக்கலாம்

நீதிபதிகள் தீர்ப்புகளை எழுதுவார்கள்

தீர்ப்புகளும் தீர்வுகளும் சம்மந்தம் இல்லாமல்

முடிந்து போகும் வழக்குகள்

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...